Thursday, June 7, 2012

புலிகளின் கோரிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன்வைக்கின்றனர் – திஸ்ஸ வித்தாரண!

Thursday, June 07, 2012
இலங்கை::புலிகளின் கோரிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்தும் முன் நிபந்தனைகளை கூட்டமைப்பு விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2003ம் ஆண்டில் வடக்கு கிழக்கு இடைக்கால சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பில் புலிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நிகரான கோரிக்கைகளையே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் முன்வைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கின் மீன்பிடி, விவசாயம், கடல் துறைமுகங்கள், கனிய வளங்கள், ஊடகம், மோட்டார் போக்குவரத்து வரி, நீதிமன்றம் மற்றும் காவல்துறை அதிகாரம் போன்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே சம்பந்தனின் கோரிக்கையாக அமைந்துள்ளது என திஸ்ஸ வித்தாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கமோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முன் நிபந்தனைகளை விதித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment