Tuesday, April 24, 2012

தமிழகத்தின் உறவு அவசியம் - அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர!

Tuesday, April, 24, 2012
இலங்கை::இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவினை விட, தமிழகத்தினுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் விரித்தி செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும், தமிழகத்துடன் ராஜதந்திர ரீதியான உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதில்லை.

இதேநேரம் இலங்கையின் உயர்மட்ட அமைச்சுக் குழு ஒன்று தமிழகத்துக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்கள், தமிழக மக்களுடன் கொண்டுள்ள மொழி மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து, இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் மறந்தே செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment